
பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் இந்த மாதம் இறுதி ஆகஸ்ட் 30ஆம் தேதி நடைபெற இருக்கும் ஆசிய கோப்பைக்கு இந்திய அணி இரண்டு நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஆசியக் கோப்பைக்கு அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் சஹாலை நீக்கியது, பேக்கப் வீரராக சஞ்சு சாம்சனை வைத்து சூரியக்குமாரை அணியில் சேர்த்தது, ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரியான ஆப் ஸ்பின்னரை எடுக்காமல், ஜடேஜா அணியில் இருக்க அவரைப்போலவே ஆன அக்சர் படேலை எடுத்தது என இதுவெல்லாம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.
அதே சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் மற்றும் சஹால் ஆகியோருக்கு உலகக் கோப்பைக்கு இன்னும் கதவுகள் அடைக்கப்படவில்லை என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இரண்டு நாட்களுக்கு முன்பு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அணி வெளியிட்டின் போது கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது ரசிகர்கள் அணியில் யாரை எடுக்க வேண்டும் என்று கூறிவரும் கருத்துகளுக்கு பதில் அளித்து பேசி இருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், “இதுவரை திலக் வர்மா அயர்லாந்து தொடரில் பெரிதாக ரன்கள் அடிக்கவில்லை. ஆனால் முதல் பந்தில் இருந்தே மிகவும் தைரியமான அணுகு முறையை வெளிப்படுத்துகிறார். மேலும் இந்த இளைஞர்கள் தெளிவான மனதுடன் பேட்டிங் செய்ய வருகிறார்கள். அவர் அணியில் புத்துணர்ச்சியை கொண்டு வருவதால் அவரை ஆதரித்து சூர்யகுமாரின் இடத்துக்கு பேக்கப் வீரராக தேர்வு செய்து இருக்கிறார்கள்.