
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று டி20 மற்றும் 2 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் டி20 தொடரானது வருகிற 17, 19 மற்றும் 21ஆம் தேதியில் நடக்கிறது. அதேபோல் முதல் டெஸ்ட் வருகிற 25ஆம் தேதியும், 2ஆவது டெஸ்ட் டிசம்பர் 3ஆம் தேதியும் தொடங்குகிறது.
இதற்கான நியூசிலாந்து அணியும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று முன்னாள் தொடக்க அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு அணியை இப்போதே தயார் செய்ய வேண்டும். தற்போது உள்ள வீரர்களில் ராகுல், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அடுத்த உலக கோப்பையில் ஆட வேண்டும். ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும்.