Advertisement
Advertisement
Advertisement

வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் அடங்கிய தொடரில் விளையாடும் 15 பேர் அடங்கிய தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.

Advertisement
வங்கதேச டெஸ்ட்  தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு!
வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Sep 30, 2024 • 07:39 PM

தென் ஆப்பிரிக்க அணியானது தற்போது அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த டி20 தொடரின் முடிவில் இரு அணிகளும் தலா 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்துள்ள நிலையில், ஒருநாள் தொடருக்காக இவ்விரு அணிகளும் தயாராகி வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
September 30, 2024 • 07:39 PM

இதனைத்தொடர்ந்து வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள தென் ஆப்பிரிக்க அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி வங்கதேசம் - தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 21ஆம் தேதி தாக்காவிலும், இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் 29ஆம் தேதி சட்டோகிராமிலும் நடைபெறவுள்ளது. 

Trending

இந்நிலையில் வங்கதேச டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி 15 பேர் அடங்கிய இந்த தென் ஆப்பிரிக்க அணியை டெம்பா பவுமா வழிநடத்தவுள்ளார். அதேசமயம் இத்தொடருக்கான தென் ஆப்பிரிக்க டெஸ்ட் அணியில் அறிமுக வீரரான மேத்யூ பிரிட்ஸ்கீக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர சேனுரான் முத்துசாமிக்கும் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம் கிடைத்துள்ளது. 

இதன்மூலம் கேசவ் மகாராஜ், டேன் பீட் ஆகியோருடன் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக சேனுரான் முத்துசாமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுதவிரா டோனி டி ஸோர்ஸி, ஐடன் மார்க்ரம், டேவிட் பெட்டிங்ஹாம், காகிசோ ரபாடா, நந்த்ரே பர்கர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், வியான் முல்டர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இந்த டெஸ்ட் அணியில் தங்களுடைய இடங்களை தக்கவைத்துள்ளனர். 

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணி: டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், மேத்யூ ப்ரீட்ஸ்கி, நந்த்ரே பர்கர், டோனி டி ஸோர்ஸி, கேசவ் மஹராஜ், ஐடன் மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பேட்டர்சன், டேன் பீட், காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கல்டன், கைல் வெர்ரைன்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement