சர்வதேச டி20 கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்திய சூர்யகுமார் யாதவ்!
தென் ஆப்ரிக்கா அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியின் மூலம் இந்திய அணியின் நம்பிக்கை நாயகனான சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. முதலாவது ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையடுத்து, நேற்று 2ஆவது டி20 போட்டி கவுகாத்தியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ராகுல், ரோஹித், கோலி, சூர்யகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடியால் 237 ரன்களை குவித்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது.
Trending
இந்தநிலையில், இந்த போட்டியில் அதிரடியாக விளையாடி 61 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் சூர்யகுமார் யாதவ், டி20 போட்டிகளில் மிகப்பெரும் சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
இந்த போட்டியின் மூலம் டி20 போட்டிகளில் 1000 ரன்களை கடந்த சூர்யகுமார் யாதவ், மிக குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள் வரிசையில், கிளன் மேக்ஸ்வெல், காலின் முன்ரோ போன்ற அதிரடி வீரர்களை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளார்.
மிக குறைந்த பந்துகளில் 1000 ரன்களை கடந்த வீரர்கள்
- சூர்யகுமார் யாதவ் – 573 ரன்கள்
- கிளன் மேக்ஸ்வெல் – 604 ரன்கள்
- காலின் முன்ரோ – 635 பந்துகள்
- எவின் லூயிஸ் – 640 பந்துகள்
- திசாரா பெரேரா – 654 பந்துகள்
அதேபோல், டி20 போட்டிகளில் அதிவேகமாக 1000 ரன்களை கடந்த (இன்னிங்ஸ் அடிப்படையில்) வீரர்கள் பட்டியலில் இவர் மூன்றாவது இடம். விராட் கோலி 27 இன்னிங்சிலும், கேஎல்ராகுல் 29 இன்னிங்சிலும் 1000 ரன்களைக் கடந்துள்ளனர்.
மேலும், சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக அரை சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுலுடன் 2ஆவது இடத்தை பகிர்ந்துள்ளார். முதல் இடத்தில் இந்தியாவின் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரை சதமடித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now