
Shabnim Ismail four-fer helps South Africa clinch series (Image Source: Google)
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி 4 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது.
இதில் இரு அணிகளுக்கும் இடையேயான 4ஆவது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய அந்த அணி 49.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 174 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக கிசியா நைட் 48 ரன்களையும், டோட்டின் 36 ரன்களையும் எடுத்தனர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் இஸ்மைல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.