
சூப்பர் 12 சுற்றில் கடைசி நாளான இன்று நெதர்லாந்திடம் தென் ஆப்பிரிக்க அணி தோல்வியை தழுவியது. இதனால் தென்னாப்பிரிக்க அணி தொடரை விட்டு வெளியேறியதால் பாகிஸ்தான் வங்கதேசம் அணிகள் மோதும் ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி அரை இறுதிக்கு செல்லும் என நிலைமை மாறியது.
இந்த நிலையில் பெரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆட்டத்தில் ஒரு சிறிய தவறு நடந்தாலே ஆட்டத்தின் போக்கே மாற்றிவிடும். நிலைமை அப்படி இருக்க நடுவர் செய்த மெகா தவறால் வங்கதேசத்தின் தலைவிதியே மாற்றிவிட்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்கதேச அணி தொடக்க வீரர் நஜிமுல் சாண்டோ 54 ரன்கள் எடுத்தார்.
வங்கதேச அணி 73 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்த நிலையில் ஷகிப் அல் ஹசன் களத்துக்கு வந்தார். அப்போது ஷதாப்கான் வீசிய பந்தில் அவர் எல்பிடபிள்யூ ஆனார். எனினும் இது ரீப்ளேவில் நாட் அவுட் என தெரிந்தது. ஆனால் நடுவர் இதற்கு அவுட் கொடுத்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே இந்தியா விளையாடிய போட்டிகளில் நடுவர்கள் செய்த தவறுக்கு ஐசிசி இந்தியாவுக்கு சாதகமாக செயல்படுவதாக ஆஃப்ரிடி போன்ற வீரர்களே குற்றஞ்சாட்டினர்.