அதிரடி நாயகி ஷஃபாலியின் மற்றுமொரு சாதனை!
சர்வதேச கிரிக்கெட் உலகின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் மிக இளம் வயதிலேயே விளையாடிய இந்தியர் என்ற பெருமையை, ஹரியானாவைச் சேர்ந்த ஷஃபாலி வர்மா படைத்துள்ளார்.

இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் நேற்று நடைபெற்ற இங்கிலாந்து எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் ஷபாலி வர்மா அறிமுக வீராங்கனையாக களம் இறங்கினார். அவர் ஏற்கெனவே டி20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய நிலையில், 17 வயது 150 நாட்களில் சர்வதேச ஒரு நாள் போட்டியிலும் தனது கால்தடத்தைப் பதித்தார்.
இதன் மூலம் குறைந்த வயதில் அனைத்துவிதமான சர்வதேச போட்டிகளிலும் விளையாடிய முதல் இந்தியர் என்ற பெருமையை சஃபாலி வர்மா பெற்றுள்ளார்.
உலக அளவில், ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த முஜிப் உர் ரஹ்மான், மிக குறைந்த வயதிலேயே அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடிய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now