
Shafali Verma, Radha Yadav shine in Sydney Sixers win in WBBL (Image Source: Google)
மகளிர் பிக் பேஷ் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 4ஆவது லீக் ஆட்டத்தில் சிட்னி சிக்சர்ஸ் - ஹாபர்ட் ஹரிகேன்ஸ் மகளிர் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சிக்சர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய ஹாபர்ட் ஹரிகேன்ஸ் அணி ரிச்சா கோஷின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்களைச் சேர்த்தது. இதில் ரிச்சா கோஷ் 46 ரன்களைச் சேர்த்தார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய சிக்சர்ஸ் அணிக்கு ஷஃபாலி வர்மா அதிரடியான அட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதில் அவர் அரைசதம் அடித்தும் அசத்தினார்.