Advertisement
Advertisement
Advertisement

BAN vs IND: இந்திய ஒருநாள் அணியில் குல்தீப் சென், ஷபாஸ் அகமது சேர்ப்பு!

வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர். 

Bharathi Kannan
By Bharathi Kannan November 24, 2022 • 12:01 PM
Shahbaz Ahmed Replaces Ravindra Jadeja In India's Squad For Bangladesh Odis, Kuldeep Sen Comes In Fo
Shahbaz Ahmed Replaces Ravindra Jadeja In India's Squad For Bangladesh Odis, Kuldeep Sen Comes In Fo (Image Source: Google)
Advertisement

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4ஆம் தேதி தொடங்குகிறது. 2ஆவது ஒருநாள் போட்டி 7ஆம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குகிறது.

Trending


இதற்கிடையே, வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

இந்திய டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல், ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ். 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement