
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அஃப்ரிடி, முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடவில்லை. ஷாஹீன் அஃப்ரிடி தனது காயத்துக்கு சிகிச்சை பெறு வதற்காக லண்டன் சென்றார்.
அங்கு சிகிச்சை பெற்று அவர் தற்போது குணம் அடைந்துள்ளார். இதையடுத்து அடுத்த மாதம் நடக்கும் டி20 ஓவர் உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியில் ஷாஹின் அஃப்ரிடி இடம் பெற்றார். இந்த நிலையில், ஷாஹீன் அஃப்ரிடி சிகிச்சை பெறுவதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் எந்த உதவியும் செய்யவில்லை என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் அஃப்ரிடி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “ஷாஹீன் அஃப்ரிடி தனது சிகிச்சைக்காக தனது சொந்த பணத்தில் விமான டிக்கெட் வாங்கி இங்கிலாந்து சென்றார். லண்டனில் ஓட்டலில் தங்குவதற்கு சொந்த பணத்தை செலவழித்தார். நான் அவருக்கு ஒரு டாக்டரை ஏற்பாடு செய்து கொடுத்தேன். பின்னர் அவர் அந்த டாக்டரை தொடர்பு கொண்டு சிகிச்சை பெற்றார்.