Advertisement

PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனில் நட்சத்திர வீரர் ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடம் கிடைக்கவில்லை.

Advertisement
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை!
PAK vs BAN, 2nd Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன் அஃப்ரிடிக்கு இடமில்லை! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Aug 29, 2024 • 07:40 PM

பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணியானது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடந்து முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணியானது 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது நாளை ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan
August 29, 2024 • 07:40 PM

இத்தொடரில் ஏற்கெனவே வங்கதேச அணி வெற்றிபெற்றுள்ள நிலையில், இப்போட்டியானடி டிராவில் முடிவடைந்தாலும் வங்கதேச அணியானது தொடரை வென்று சாதனை படைக்கும். அதேசமயம், பாகிஸ்தான் அணி இப்போட்டியில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே தொடரை சமன்செய்ய முடியும். இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Trending

இந்நிலையில் இப்போட்டிக்கான 12 பேர் அடங்கிய பாகிஸ்தான் அணியானது இன்று அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் யாரும் எதிர்பார்க்காத வகையில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அஃப்ரிடிக்கும் இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது விவாதங்களுக்கு வழிவகுத்துள்ளது. அதேசமயம், அவருக்கு குழந்த பிறந்துள்ளதன் காரண்மாகவே இந்த ஓய்வானது கொடுக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

அதேசமயம் முதல் டெஸ்ட் போட்டிகான பாகிஸ்தான் அணியில் இருந்து விலக்கப்பட்டிருந்த அப்ரார் அஹ்மத் மற்றும் மிர் ஹம்ஸா ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேற்கொண்டு ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சௌத் ஷகீல், நசீம் ஷா உள்ளிட்டோர் மீண்டும் இடம்பிடித்துள்ள நிலையில், மூத்த வீரர்களான சர்ஃப்ராஸ் அஹ்மத், காம்ரன் குலாம், அமிர் ஜமால் உள்ளிட்டோருக்கு மீண்டும் லெவனில் இடம் கிடைக்கவில்லை. 

Also Read: Funding To Save Test Cricket

பாகிஸ்தான் 12's: அப்துல்லா ஷபீக், சைம் அயூப், ஷான் மசூத் (கே), பாபர் ஆசாம், சௌத் ஷகீல், முகமது ரிஸ்வான், ஆகா சல்மான், முகமது அலி, நசீம் ஷா, அப்ரார் அகமது, குர்ரம் ஷஸாத், முகமது அலி.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement