Advertisement

மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஷாஹின் அஃப்ரிடி!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையை பாகிஸ்தானின் ஷாஹின் அஃப்ரிடி படைத்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan October 31, 2023 • 16:23 PM
மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஷாஹின் அஃப்ரிடி!
மிட்செல் ஸ்டார்க் சாதனையை முறியடித்த ஷாஹின் அஃப்ரிடி! (Image Source: Google)
Advertisement

இந்தியாவில் ரசிகர்களை மகிழ்வித்து வரும் ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 31ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற்ற 31ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகள் மோதின. ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை ஏறத்தாழ கோட்டை விட்ட இவ்விரு அணிகளில் தொடர்ச்சியாக 4 தோல்விகளை பதிவு செய்து திண்டாடி வரும் பாகிஸ்தான் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது.

அந்த சூழ்நிலையில் மதியம் 2 மணிக்கு தொடங்கிய அப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் தைரியமாக பேட்டிங் செய்வதாக அறிவித்தது. மறுபுறம் பாகிஸ்தான் அணியில் நட்சத்திர வீரர் இமாம்-உல்-ஹக் அதிரடியாக நீக்கப்பட்டு ஃபகர் ஸமான் மீண்டும் தொடக்க வீரராக சேர்க்கப்பட்டார். அதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய வங்கதேசத்திற்கு முதல் ஓவரிலேயே தன்சித் ஹசனை தன்னுடைய அதிரடியான வேகத்தால் ஷாஹின் அஃப்ரிடி டக் அவுட்டாக்கினார்.

Trending


அதே வேகத்தில் அடுத்ததாக வந்த நஜ்முல் சாண்டோவை 3ஆவது ஓவரில் 3 ரன்களில் அவுட்டாக்கிய ஷாஹீன் அஃப்ரிடி ஒருநாள் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கடந்து அசத்தினார். சொல்லப்போனால் 51 போட்டிகளிலேயே 100 விக்கெட்டுகளை எடுத்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 100 விக்கெட்டுகளை எடுத்து வேகப்பந்து வீச்சாளர் என்ற ஆஸ்திரேலியாவின் மிட்சேல் ஸ்டார்க் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார். 

அந்த பட்டியல் (போட்டிகள்):

  • ஷாஹீன் அப்ரிடி : 51
  • மிட்சேல் ஸ்டார்க் : 52
  • ஷேன் பாண்ட்/ முஸ்தஃபிசூர் ரஹ்மான் : 54

அந்த வகையில் பாகிஸ்தானின் முதன்மை பந்து வீச்சாளரான அவர் இந்த தொடரில் ஆரம்பம் முதலே தடுமாறியது அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமானது. இருப்பினும் இந்த போட்டியில் மீண்டும் புதிய பந்தை ஸ்விங் செய்து அடுத்தடுத்த விக்கெட்களை எடுத்த அவர் தன்னுடைய தரத்தை காட்டி பாகிஸ்தானுக்கு நல்ல தொடக்கத்தை கொடுத்தார்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement