
Shahrukh Khan does an MS Dhoni (Image Source: Google)
சையத் முஷ்டாக் அலி கோப்பைப் தொடரின் இறுதிச்சுற்றில் கர்நாடகத்தை வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆகியுள்ளது. கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து தமிழக அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் ஷாருக் கான்.
இதன்மூலம் சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் தமிழ்நாடு அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று, இத்தொடரில் அதிகமுறை சாம்பியன் பட்டம் வென்ற அணி என்ற புகழைப் பெற்றது.
மேலும் தொடர்ச்சியாக மூன்று முறை இறுதிப்போட்டிக்குள் நுழைந்து, அதில் இரண்டு முறை கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.