
ரஞ்சி கோப்பைப் போட்டி பிப்ரவரி 17 முதல் தொடங்கியுள்ளது. குவாஹாட்டியில் நடைபெறும் எலைட் எச் பிரிவு ஆட்டத்தில் தமிழகமும் தில்லியும் மோதுகின்றன. டாஸ் வென்ற தமிழக அணி கேப்டன் விஜயசங்கர், ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தார்.
தில்லி அணி முதல் இன்னிங்ஸில் 141.2 ஓவர்களில் 452 ரன்கள் குவித்தது. யாஷ் துல், சிறப்பாக விளையாடி 150 பந்துகளில் 18 பவுண்டரிகளுடன் 113 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். 25 வயது லலித் யாதவ், 177 ரன்கள் எடுத்தார். 287 பந்துகளில் 10 சிக்ஸர்கள், 17 பவுண்டரிகள் அடித்தார். தமிழகப் பந்துவீச்சாளர் எம். முகமது 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ரஞ்சி கிரிக்கெட் வரலாற்றில் எதிரணி முதல் இன்னிங்ஸில் 450 ரன்களை எடுத்தபோதெல்லாம் தமிழக அணி ஒருமுறை கூட முன்னிலை பெற்றதில்லை. நிலைமை இப்படியிருக்க, இந்த ஆட்டத்தில் தமிழக அணி என்ன செய்யப்போகிறது என்கிற ஆவல் பலரிடமும் இருந்தது.