Advertisement

நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - ஷாகிப் அல் ஹசன்!

இப்போட்டியில் கடைசி 10 ஓவரில் ஹென்றிச் கிளாசின் விளையாடிய விகிதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

Advertisement
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - ஷாகிப் அல் ஹசன்!
நாங்கள் அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் - ஷாகிப் அல் ஹசன்! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Oct 25, 2023 • 11:50 AM

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று மும்பையில் நடைபெற்ற லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் வங்கதேச பவுலர்களுக்கு எதிராக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 382 ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவங்க வீரர் குயிண்டன் டீ காக் அபாரமாக விளையாட வழி சதமடித்து 174 ரன்கள் குவித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
October 25, 2023 • 11:50 AM

அவருடன் கேப்டன் ஐடன் மார்க்ரம் 60, ஹென்றிச் கிளாசின் 90, டேவிட் மில்லர் 34 ரன்கள் எடுக்க வங்கதேசம் சார்பில் அதிகபட்சமாக ஹசன் முகமது 2 விக்கெட்களை வைத்தார். அதைத்தொடர்ந்து 383 ரன்களை துரத்திய வங்கதேசத்திற்கு லிட்டன் தாஸ் 22, தன்ஸித் ஹசன் 12, நஜ்முல் சாண்டோ 0, கேப்டன் சாகிப் 1, ரஹீம் 8, மெஹதி ஹசன் 11 என முக்கிய வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

Trending

அதனால் 81/6 என ஆரம்பத்திலேயே தெரிந்த வங்கதேசத்திற்கு அனுபவ வீரர் முஹ்முதுல்லா டெயில் எண்டர்களுடன் சேர்ந்து தன்னுடைய கிளாஸ் ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றிக்கு போராடினார். இருப்பினும் எதிர்ப்புறம் நசும் அஹ்மத் 19, ஹசன் முக்மத் 15, ரஹ்மான் 11 ரன்கள் எடுத்து போராடி அவுட்டானார். ஆனாலும் மறுபுறம் தொடர்ந்து அசத்திய மஹமதுல்லா சதமடித்து 11 பவுண்டரி 4 சிக்சருடன் 111 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இறுதி வரை 46.4 ஓவரில் வங்கதேசத்தை 234 ரன்களுக்கு சுருட்டி 149 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ஜெரால்ட் கோட்சி 3 விக்கெட்கள் எடுத்தார். இந்நிலையில் இப்போட்டியில் கடைசி 10 ஓவரில் ஹென்றிச் கிளாசின் விளையாடிய விகிதத்திற்கு பதில் சொல்ல முடியவில்லை என்று தெரிவிக்கும் வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் தங்களுடைய அணி அரையிறுதிக்கு தகுதி பெறுவது கடினம் என்றும் ஏமாற்றமாக பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “நாங்கள் முதல் 25 ஓவர்களில் சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை எடுத்தோம். ஆனால் அங்கிருந்து குயிண்டன் டீ காக் சிறப்பாக பேட்டிங் செய்தார். மேலும் க்ளாஸென் ஃபினிஷிங் செய்த விதத்திற்கு எங்களிடம் எந்த பதிலுமில்லை. இது போன்ற சிறிய மைதானங்களில் இவ்வாறு நடைபெறும் என்றாலும் நாங்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசியிருக்க வேண்டும். கடைசி 10 ஓவர்களில் தான் நாங்கள் தோற்றோம்.

ரஹீம் – அகமதுல்லா ஆகியோர் மேல் வரிசையில் விளையாடுவது பற்றி பேச்சுகள் இருக்கிறது. ஆனால் அவர்கள் சிறப்பாக செயல்பட்டதைப் போல் டாப் 4 பேட்ஸ்மேன்களும் அசத்த வேண்டும். இந்த பெரிய உலகக் கோப்பையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். நாங்கள் செமி ஃபைனல் தகுதி பெற விட்டாலும் 4 – 5ஆவது இடத்தை பிடித்தால் நன்றாக உணர்வோம். இப்போதும் நாங்கள் சிறப்பாக விளையாடி வலுவாக ஃபினிஷிங் செய்ய முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement