
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணியானது தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற இங்கிலாந்து அணியானது நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்தது.
இதன் மூலம் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியது. அதன்படி நேற்று நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் முதலில் விளையாடிய வங்கதேச அணியானது 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 246 ரன்கள் குவித்தது.
பின்னர் 247 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 43.1 ஓவரில் 196 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் பேட்டிங்கில் 75 ரன்களையும் பந்துவீச்சில் நான்கு விக்கெட்டுகளையும் எடுத்து அசத்திய வங்கதேச அணியின் முன்னணி ஆல் ரவுண்டான ஷாகிப் அல் ஹசன் ஆட்டநாயகன் விருதினை வென்றார்.