
இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் இந்திய அணியானது 280 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியதுடன், இந்த டெஸ்ட் தொடரிலும் 1-0 என்ற கணக்கில் முன்னிலையும் வகித்து வருகிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கான்பூரில் உள்ள க்ரீன் பார்க் மைதானத்தில் எதிவரும் செப்டம்பர் 27ஆம் தேதி முதல் நடைபெறவுளது.
இந்த போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றாலோ அல்லது போட்டியை டிராவில் முடித்தாலும் கூட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தும். அதேசமயம் வங்கதேச அணியானது தொடர் இழப்பை தடுப்பதற்காக கடுமையாக போராடும் என்பதல் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக தற்சமயம் இவ்விரு அணிகளும் தீவிரமான பயிற்சியிலும் ஈடுபட்டுவருகின்றன.