
Shakib Al Hasan Likely To Miss PSL To Play Dhaka Premier League (Image Source: Google)
வங்கதேச அணியின் முன்னாள் கேப்டன் ஷகிப் அல் ஹசன். கடந்தாண்டு சூதாட்ட புரோக்கர்கள் அணுகியதை சரியாக ஐசிசியிடம் தெரிவிக்காத வங்கதேச ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹசனுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்பட்டது.
இந்தத் தடைக்காலம் முடிவடைந்த நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரிலும், ஐபிஎல் தொடரிலும் இவர் பங்கேற்றிருந்தார்.
மேலும், பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 கிரிக்கெட் தொடரில் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாக பிஎஸ்எல் தொடர் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது.