
ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று டெல்லியில் நடைபெற்ற போட்டியில் இலங்கையை 3 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்கடித்தது. ஆனால் அதை விட இப்போட்டியில் ஏஞ்சலோ மேத்யூஸ் மிகப்பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. அதாவது அந்த போட்டியில் பேட்டிங் செய்வதற்காக களத்திற்கு வந்த மேத்யூஸ் முதல் பந்தை எதிர்கொள்வதற்கு முன்பாக ஹெல்மெட் பழுதாக இருந்ததை பார்த்தார்.
அதனால் தன்னுடைய அணியிடமிருந்து புதிய ஹெல்மட்டை வாங்கிய அவர் வேண்டுமென்ற நேரத்தை தாமதம் செய்வதாக புகார் செய்த வங்கதேச அணியினர் நடுவரிடம் அவுட் கொடுக்குமாறு கேட்டனர். அதை பரிசீலித்த நடுவர்கள் மேத்யூஸ் அவுட்டென அறிவித்தது அனைவரையும் ஆழ்த்தியது. இருப்பினும் பேட்ஸ்மேன் அவுட்டாகி சென்ற பின் அடுத்த பந்தை எதிர்கொள்வதற்கு 2 நிமிடத்திற்குள் வர வேண்டிய மேத்யூஸ் தாமதமாக வந்ததால் 143 வருட கிரிக்கெட்டில் கால தாமதத்தால் அவுட்டான முதல் வீரர் என்ற பரிதாப சாதனை படைத்தார்.
பொதுவாக விதிப்படி இது அவுட் என்றாலும் எதிரணிகள் இது போன்ற நியாயமான காரணங்களால் தாமதம் ஆனால் அவுட் கேட்க மாட்டார்கள். ஆனால், ஷாகிப் அல் ஹசன் அவுட் கேட்டதால் பெரும் சர்ச்சை வெடித்தது. இந்த சம்பவம் நடந்த பின் இலங்கை - வங்கதேச வீரர்கள் இடையே பல வார்த்தை மோதல்கள் நடந்தன. போட்டிக்கு பின் இலங்கை வீரர்கள் கை குலுக்க வரவில்லை. இந்த நிலையில், இதற்கு மறுநாள் ஷாகிப் அல் ஹசன் உலகக்கோப்பை தொடரில் இருந்து விலகுவதாக தகவல் வெளியாகி உள்ளது.