Advertisement

ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்!

பாகிஸ்தானில் நடைபெறும்  சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற உள்ளதாக வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

Bharathi Kannan
By Bharathi Kannan September 28, 2023 • 20:03 PM
ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்!
ஓய்வு முடிவை அறிவித்த ஷாகிப் அல் ஹசன்! (Image Source: Google)
Advertisement

பாகிஸ்தானில் வருகிற 2025ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்குப் பிறகு தனது சர்வதேச கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவிப்பேன் என வங்கதேச அணியின் ஆல்ரவுண்டர் ஷகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய ஷாகிப் அல் ஹசன், “2025 ஆம் ஆண்டு  சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெறுவேன். 2024  டி20 உலகக் கோப்பைக்குப் பிறகு டி20 போட்டிகளில் ஓய்வு முடிவை அறிவிப்பேன். டெஸ்ட் போட்டிகளில் விரைவில் எனது ஓய்வை அறிவிப்பேன். நான் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் ஒன்றன்பின் ஒன்றாக ஓய்வு பெறுவேன். 

Trending


எனது ஓய்வு முடிவை 2025 ஆம் ஆண்டு சாம்பியன் கோப்பை தொடருக்குப் பிறகு அறிவிப்பேன். இந்த உலகக் கோப்பை தொடர் வரை மட்டுமே நான் வங்கதேச அணியின் கேப்டனாக செயல்படுவேன். அதன்பின் கேப்டன் பொறுப்பில் இருக்க மாட்டேன். இந்த தருணத்தில் எனது கேப்டன்சி எனது ஆட்டத்துக்கு மதிப்பு சேர்ப்பதாக நான் நினைக்கவில்லை. நான் அணிக்காக 10 ஓவர்கள் வீச வேண்டும். 

அணிக்காக சிறப்பான பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் திறமைகளை வெளிப்படுத்த வேண்டும். அதற்கு நான் கேப்டன்சியில் இருந்து வெளிவர வேண்டும். இந்த வயதில் நான் கேப்டன்சியால் ஏற்படும் அழுத்தங்களை எடுத்துக் கொள்ளத் தயாராக இல்லை. நான் வங்கதேச அணிக்காக எனது பங்களிப்பை மகிழ்ச்சியாக வெளிப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெறும் ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசம் அணி வருகிற அக்டோபர் 7 ஆம்  தேதி தனது முதல் போட்டியில் ஆஃப்கானிஸ்தானை எதிர்த்து விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement