BAN vs PAK: காயத்திலிருந்து மீண்ட ஷாகிப்; 2ஆவது போட்டிக்கு தயார்!
வங்கதேச ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் காயத்திலிருந்து குணமடைந்திருப்பதால், பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்துவரும் பாகிஸ்தான் அணி 3 டி20, 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் டி20 தொடரைன் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி வங்கதேசத்தை ஒயிட்வாஷ் செய்த பாகிஸ்தான் அணி, முதல் டெஸ்ட் போட்டியிலும் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியுள்ளது.
இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 4ஆம் தேதி நடைபெறுகிறது. ஏற்கெனவே முதல் போட்டியை பாகிஸ்தான் வென்றுள்ளதால், இப்போட்டியை டிராவில் முடித்தாலும் தொடரைக் கைப்பற்றும். இதனால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காமல் இருந்த நட்சத்திர ஆல்ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன் தற்போது காயத்திலிருந்து குணமடைந்துள்ளார். இதனால் பாகிஸ்தானுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
அதேசமயம் வேகப்பந்து வீச்சாளர் டஸ்கின் அஹ்மது காயத்திலிருந்து குணமடைந்திருப்பதால், அவரும் இரண்டாவது போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Win Big, Make Your Cricket Tales Now