
வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இத்தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.
இப்போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஷமார் ஜோசப் அபாரமாக பந்துவீசி 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதன்மூலம் அவர் இப்போட்டியின் ஆட்டநாயகனாகவும், இத்தொடரின் தொடர் நாயகனாகவும் தேர்வுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய அவர், “இந்த வெற்றி உண்மையில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய அணி வீரர்கள் கொடுத்த ஆதரவுக்கும், அன்புக்கும் எனது நன்றிகள். எனது காலில் காயம் இருந்தாலும், என் வலியைக் கடந்து நான் இங்கு எனது நாட்டிற்காக வெற்றியைத் தேடிக்கொடுத்துள்ளேன். எங்களால் இப்போட்டியில் வெற்றிபெற்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன்செய்ய முடியும் என்று நம்பிய அனைவருக்கும் நான் எனது நன்றியைக் கூறிக்கொள்கிறேன்.