ஐசிசி மாதாந்திர விருதுகள்: ஜனவரி மாதத்திற்கான விருதை வென்றார் ஷமார் ஜோசப்!
ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரராக வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப்பும், சிறந்த வீராங்கனையாக அயர்லாந்தின் ஏமி ஹண்டரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு மாதமும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர், வீராங்கனைகளைத் தேர்வு செய்து விருதுகளை வாழங்கி வருகிறது. அந்த வகையில் ஜனவரி மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான பரிந்துரையை ஐசிசி சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அதில் இந்திய அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்த இங்கிலாந்தின் ஒல்லி போப், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசிய வெஸ்ட் இண்டீஸின் ஷமார் ஜோசப், ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹசில்வுட் ஆகியோரது பெயர்கள் விருதுக்காக பரிந்துரை செயப்பட்டிருந்தது.
இந்நிலையில் வாக்கெடுப்பின் அடிப்படையில் இவ்விருதனை வெஸ்ட் இண்டீஸின் இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷமார் ஜோசப் கைப்பற்றியுள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான் டெஸ்ட் தொடரின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அறிமுகமானர். அதன்பின் பிரிஸ்பேனில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டியின் போது தோல்வியின் விளிம்பில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் அணியை தனது அபாரமான பந்துவீச்சின் மூலம் வெற்றிபெறவைத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
Trending
இந்நிலையில் அவருக்கு ஜனவரி மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரர் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் இந்த விருதினை வெல்லும் முதல் வீரர் எனும் பெருமையையும் ஷமார் ஜோசப் பெற்றுள்ளார். மேலும் இவர் ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் கடந்த ஜனவரி மாதம் சர்தேச மகளிர் கிரிக்கெட்டில் சிறந்து விளங்கிய அயர்லாந்தின் ஏமி ஹண்டர் மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனைகளான பெத் மூனி, அலிசா ஹீலி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் அயர்லாந்து அணியின் ஏமி ஹண்டர் அதிக வாக்குகளைப் பெற்று ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதை வென்றுள்ளார்
Win Big, Make Your Cricket Tales Now