
Shane Warne Expired Due To Natural Causes, Confirm Autopsy Reports (Image Source: Google)
ஆஸ்திரேலிய சுழல் ஜாம்பவான் ஷேன் வார்னே தாய்லாந்துக்கு சென்ற நிலையில், அங்கு அவரது சொந்த விடுதியில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 52 வயதான ஷேன் வார்னே மரணம், கிரிக்கெட் உலகையே சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
ஷேன் வார்னே திடீரென உயிரிழந்ததால் அவரது இறப்பு குறித்த சந்தேகம் எழுந்தது. அவரது அறையை பரிசோதித்த காவல்துறையினர், அவரது அறையில் சில இடங்கள் மற்றும் துண்டு, தலையணை ஆகியவற்றில் இரத்தக்கறை இருந்ததாக தெரிவித்திருந்தனர்.
அவருக்கு ஆஸ்துமா மற்றும் இரத்தப்போக்கு ஆகிய பிரச்னைகள் இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அவரது உடலில் காயங்கள் எதுவும் இல்லாததால் அவரது இறப்பு இயற்கையானதுதான் என காவல்துறையினர் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.