Advertisement

கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு!

ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்று கோப்பையை வெல்லும் என முன்னாள் ஆஸ்திரேலிய வீர்ர் ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.

Advertisement
கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு!
கேகேஆர் அணி கோப்பையை வெல்லும் - ஷேன் வாட்சன் கணிப்பு! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 03:05 PM

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்த ஐபிஎல்  தொடரின் 17ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி இத்தொடரில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எதிர்கொள்ள உள்ளது. முன்னதாக முதலாவது குவாலிஃபையர் சுற்று ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கேகேஆர் அணியானது இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.  

Bharathi Kannan
By Bharathi Kannan
May 26, 2024 • 03:05 PM

இதனால் அத்தோல்விக்கு பதிலடி கொடுப்பதுடன் ஐபிஎல் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் ஹைதராபாத் அணி இப்போட்டியை எதிர்கொள்ள உள்ளது. அதேசமயம் இத்தொடரில் மிகவும் வலிமை வாய்ந்த அணியாக வலம் வரும்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் கோப்பையை வெல்ல கடுமையாக போராடும் என்பதால் இப்போட்டியல் எந்த அணியானது வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 

அந்தவகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற கணிப்புகளை முன்னாள் வீரர்கள் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில், நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது சாம்பியன் பட்டம் வெல்லும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் கணித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளபக்கத்தில் தனது கருத்தினைத் தெரிவித்துள்ளார். 

 

அவர் தனது எக்ஸ் பதிவில், "இந்த இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெறும் என்று நம்புகிறேன். சீசன் முழுவதும் அவர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். குவாலிஃபையர் ஒன்றில் அற்புதமாக பந்துவீசிய மிட்செல் ஸ்டார்க் அவர்களிடம் இருக்கிறார். சேப்பாக்கத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய சுனில் நரைன் மற்றும் வருண் சக்ரவர்த்தி போன்ற சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்களிடம் உள்ளனர். அதுமட்டுமின்றி, ஆண்ட்ரே ரஸல் போன்ற அதிரடி வீரரும் அணியில் உள்ளர். அதனால் எனது கணிப்பு கேகேஆர் அணி தான் கோப்பையை வெல்லும்” என்று தெரிவித்துள்ளார். 

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement