
கடந்த 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் ஊழல் குற்றச்சாட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் ஆகிய அணிகளுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இந்த இரண்டு ஆண்டுகளுக்கு மாற்றாக குஜராத் மற்றும் புனே அணிகள் இடம் பெற்றன. இதற்கு அடுத்து 2008 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் ஐபிஎல் தொடருக்கு திரும்பி வந்தன. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வெற்றிகரமான அணியாக விளங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு முக்கியமான ஆண்டாக இருந்தது.
ஆனால் அந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்களையே அதிகம் ஏலத்தில் வாங்கி இருந்தது. இதன் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டாடி ஆர்மி என்று வெளியில் கேலி செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு முன்பு நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் டீம் மீட்டிங்கில் மகேந்திர சிங் தோனி, எந்த தவறும் வீரர்களான நாங்கள் செய்யாத பொழுது இப்படியான தண்டனை எங்களுக்கு எதற்கு என்று தெரியவில்லை என்று கண்கலங்க பேசி இருந்தார்.
பின்பு அந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றது வரலாறு. தற்பொழுது அக்காலக்கட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று இருந்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தற்பொழுது இது குறித்து நினைவு கூர்ந்து பேசி இருக்கிறார்.