
ஐபிஎல் மெகா ஏலம் படு சுவாரஸ்யமாக நடந்து முடிந்த நிலையில் அடுத்ததாக போட்டிகள் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதன்படி வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் மே மாதம் முதல் வாரம் போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொடருக்காக ஒவ்வொரு அணிகளும் தங்களது குழுவில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகின்றனர். குறிப்பாக பல அணிகளும் தங்களது பயிற்சியாளர்களை மாற்றி வருகின்றன. அந்தவகையில் தோனிக்கும் மிகவும் நெருங்கிய வீரரான ஷேன் வாட்சன் மீண்டும் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக திரும்புகிறார். ஆனால் அது சிஎஸ்கேவுக்கு இல்லை.
சிஎஸ்கேவுக்கு வர வேண்டும் என்பது தான் வாட்சனின் ஆசை. ஆனால் இந்த முறை அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செல்லவிருக்கிறார். இது தோனிக்கே ஆச்சரியமாக அமைந்துள்ளது. நீண்ட நாட்களாக சமாதானப்படுத்தி ரிக்கிப் பாண்டிங் அவரை அணிக்குள் சேர்த்துக்கொண்டார். டெல்லி அணியில் துணைக்கேப்டனாக இருந்த முகமது கைஃப் பதவி விலகினார். இதனையடுத்து அவரின் இடத்திற்காக வாட்சன் வந்துள்ளார்.