
இந்திய அணியின் முன்னணி ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா 2016 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 63 ஒருநாள் போட்டிகள், 49 டி20 போட்டிகள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி உள்ளார். ஏற்கனவே முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக லண்டன் சென்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட பாண்டியா தற்போது பந்து வீசா முடியாமல் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இதன் காரணமாக இந்திய அணியில் அவரது இடம் கேள்விக்குறியானது.
இந்நிலையில் தற்போது பந்து வீசி வரும் அவர் டி20 மற்றும் ஒருநாள் போட்டியிலேயே தனது கவனத்தைச் செலுத்தி வருகிறார். இந்திய டெஸ்ட் அணியில் அவர் இன்னும் இடம்பெறவில்லை. மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட வேண்டும் என்றால் நிச்சயம் பந்துவீசியாக வேண்டுமென இந்திய நிர்வாகம் உறுதியான முடிவில் உள்ளது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா மீண்டும் டெஸ்ட் அணிக்கு திரும்புவது சந்தேகமாகி உள்ளது.
ஏனெனில் இந்திய ஆடுகளங்களில் இரண்டு ஸ்பின்னர்கள் மற்றும் 3 வேகப்பந்து வீச்சாளர்களுடன் இந்திய அணி விளையாடுவதால் அவர் ஆல்-ரவுண்டராக இந்திய மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட முடியாது. அதே வேளையில் வெளிநாட்டு மைதானங்களில் நிச்சயம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் தேவை என்கிற காரணத்தினால் ஹார்திக் பாண்டியா டெஸ்ட் அணியில் நீடிப்பார் என்று கூறப்பட்டது.