ஒரே ஓவரில் 22 ரன்களை விளாசிய ஷஃபாலி வர்மா - வைரலாகு காணொலி!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான டபிள்யூபிஎல் லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனை ஷஃபாலி வர்மா ஒரே ஓவரில் 22 ரன்களைச் சேர்த்த காணொளி வைரலாகி வருகிறது.

நேற்று வதோதராவில் உள்ள கோடாம்பி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் பிரீமியர் லீக் 2025 தொடரின் இன் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி, நடப்பு சீசனை வெற்றியுடன் தொடங்கியுள்ளது. இப்போட்டியில்முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 19.1 ஓவர்களில் 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது, பின்னர் விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில், டெல்லி அணிக்காக தொடக்க வீராங்கனையாக களமிறங்கிய ஷஃபாலி வர்மா 18 பந்துகளில் 43 ரன்கள் எடுத்தார். இந்த 43 ரன்களில், அவர் ஒரே ஓவரில் 22 ரன்களையும் குவித்திருந்தார். இப்போட்டியில் 164 ரன்கள் என்ற இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு ஷஃபாலி வர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார். சைகா இஷாக் வீசிய இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரில் அவர் அற்புதமான பவர்-ஹிட்டிங்கை வெளிப்படுத்தி 22 ரன்கள் எடுத்தார்.
Also Read
இந்த ஓவரில், அவர் இரண்டாவது பந்தில் ஒரு சிக்ஸர் அடித்தார், அதன் பிறகு எதிர்கொண்ட நான்கு பந்துகளிலும் தொடர்ச்சியாக நான்கு பவுண்டரிகள் அடித்து மொத்தமாக அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்தார். இதனால் மும்பை அணி ஆரம்பத்திலேயே பெரும் பின்னடைவை சந்தித்தது. தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்களையும் விளாசினார். இந்நிலையில் இப்போட்டியில் ஷஃபாலி வர்மா அதிரடியாக விளையாடிய காணொளி வைரலாகி வருகிறது.
Shafali Verma in the house
— Women's Premier League (WPL) (@wplt20) February 15, 2025
She smacks runs in just the second over of the #DC innings
Updates https://t.co/99qqGTKYHu#TATAWPL | #MIvDC | @TheShafaliVerma | @DelhiCapitals pic.twitter.com/Vh2MJrK2RC
இப்போட்டி பற்றி பேசினால், முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியானது 19.1 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியில் அதிகபட்சமாக இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த நாட் ஸ்கைவர் பிரண்ட் 80 ரன்களையும், கேப்டன் ஹர்னம்பிரீத் கவுர் 42 ரன்களையும் சேர்த்தனர். கேப்பிட்டல்ஸ் அணி தரப்பில் அனபெல் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளையும், ஷிகா பாண்டே 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
Also Read: Funding To Save Test Cricket
இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய கேப்பிட்டல்ஸ் அணியில் ஷஃபாலி வர்மா 43 ரன்களையும், அறிமுக வீராங்கனை நிக்கி பிரசாத் 35 ரன்களையும், ராதா யாதவ் 9 ரன்களையும், கடைசி பந்தில் வெற்றிக்கு தேவையான இரண்டு ரன்களை அருந்ததி ரெட்டியும் சேர்த்தனர். இதன்மூலம் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது.
Win Big, Make Your Cricket Tales Now