தவான் தனது வேலையை சரியாக செய்துவருகிறார் - ஆகாஷ் சோப்ரா!
தொடர் புறக்கணிப்புகளையும், விமர்ச்சனங்களையும் எதிர்கொண்டு வந்தாலும் ஷிகர் தவான் இந்திய அணிக்கான தனது பங்களிப்பை சரியாக செய்து வருவதாக முன்னாள் இந்திய வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஜிம்பாப்வே அணியுடன் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நேற்று முந்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறியதால், 189 ரன்கள் மட்டுமே எடுத்த ஜிம்பாப்வே அணி ஆல் அவுட்டானது.
இதன்பின் 190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகர் தவான் 81 ரன்களும், சுப்மன் கில் 82 ரன்களும் எடுத்து கொடுத்ததன் மூலம், ஒரே விக்கெட்டை கூட இலக்காமல் இலகுவாக இலக்கை எட்டிய இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Trending
இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த ஷிகர் தவான், சுப்மன் கில் போன்ற வீரர்களை முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில் என்ன தான் இந்த போட்டியில் ஷிகர் தவான் 81 ரன்கள் எடுத்து கொடுத்திருந்தாலும், ஷிகர் தவான் டெஸ்ட் போட்டிகளை போன்று மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார், இனி அவருக்கு இடம் கொடுக்காமல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்றும் சிலர் ஷிகர் தவானை விமர்சித்தும் வருகின்றனர்.
இந்தநிலையில், ஷிகர் தவான் குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா, ஷிகர் தவானின் பொறுப்பான பேட்டிங்கை வெகுவாக் பாராட்டியும் பேசியுள்ளார்.
இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, “தனக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் ஷிகர் தவான் சரியாக பயன்படுத்தி அதில் தனது வேலையை சரியாகவே செய்து வருகிறார். ஷிகர் தவானுக்கு எதிராக ஒட்டுமொத்த உலகமும் இருந்தாலும், ஷிகர் தவான் தனது விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்தி தனது வேலையை மட்டும் குறையே சொல்ல முடியாத அளவிற்கு செய்து வருகிறார்.
ஜிம்பாப்வே தொடருக்கான கேப்டன் பதவியில் இருந்து திடீரென நீக்கப்பட்டதையும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்ட ஷிகர் தவான், இந்த தொடரில் சிறிதும் சுயநலம் இல்லாமல் விளையாடுவது மகிழ்ச்சியளிக்கிறது. இந்திய அணிக்கு கிடைத்த சிறப்பான வீரர்களில் ஷிகர் தவானும் ஒருவர்” என்று தெரிவித்தார்.
Win Big, Make Your Cricket Tales Now