இம்பேக்ட் பிளேயர் சில நேரங்களில் வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்வதில்லை - ஷிகர் தவான்!
நாங்கள் அதிகப்படியான ரன்களை தந்தோம். பிற்பகுதியில் அதற்கான விலையை நாங்கள் கொடுத்தோம் என பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 38ஆவது போட்டியில் பஞ்சாப் மொஹாலி மைதானத்தில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி அதிக ரன்கள் அடிக்கப்பட்ட போட்டியாக நடைபெற்று முடிந்திருக்கிறது. முதலில் டாசை இழந்து பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கையில் மேயர்ஸ், ஆயுஸ் பதோனி, ஸ்டாய்னிஸ் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் அதிரடியான பேட்டிங்கை வழங்கியதால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச இரண்டாவது மொத்தத்தை 257 ரன்கள் என பதிவு செய்தது.
சாதனை இலக்கை நோக்கி விளையாடிய பஞ்சாப் அணி சீராக விளையாடிய பொழுதும், லக்னோ அணி நிர்ணயித்த இலக்கை தொடுவதற்கு அது போதுமானதாக அமையவில்லை. இறுதியில் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சாப் அணி 21 ரன்கள் மட்டுமே எடுத்து 56 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது. முதல் இடத்தில் ராஜஸ்தான் அணி இருக்கிறது. மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் இருக்கின்றன.
Trending
மூன்று ஆட்டங்களுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் கூறுகையில், “நாங்கள் அதிகப்படியான ரன்களை தந்தோம். பிற்பகுதியில் அதற்கான விலையை நாங்கள் கொடுத்தோம். ஒரு கூடுதல் வேகப்பந்துவீச்சாளர்டன் சென்றது எங்களுக்கு பேக் ஃபயர் ஆகிவிட்டது. அதே நேரத்தில் கேஎல் ராகுல் ஒரு கூடுதல் ஸ்பின்னரை கொண்டு வந்தார். நான் எதையாவது மாற்ற நினைத்தேன் ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
ஆனாலும் இது எனக்கு ஒரு நல்ல பாடம். நாங்கள் இன்னும் வலிமையுடன் திரும்பி வருவோம். லிவிங்ஸ்டன் அணியில் இருந்தார் மேலும் சாம் கரன் பேட்டிங்கில் நல்ல நிலையில் இருக்கிறார் எனவே ஷாருக் கான் எட்டாவது இடத்தில் அனுப்ப வேண்டியதாக இருக்கிறது. இம்பேக்ட் பிளேயர் சில நேரங்களில் வேலை செய்கிறது சில நேரங்களில் வேலை செய்வதில்லை. ஆனால் இது எல்லாம் சேர்ந்ததுதான் இந்த விளையாட்டு” என்று கூறி இருக்கிறார்.
Win Big, Make Your Cricket Tales Now