Advertisement

SA vs IND: மீண்டும் கம்பேக் கொடுக்கும் ஷிகர் தவான்?

தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான் கம்பேக் கொடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan December 08, 2021 • 19:00 PM
Shikhar Dhawan likely to return for South Africa ODIs
Shikhar Dhawan likely to return for South Africa ODIs (Image Source: Google)
Advertisement

இந்திய அணி இம்மாதம் இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது.

இந்திய அணி இதுவரை தென் ஆப்பிரிக்காவை அதன் மண்ணில் வீழ்த்தியதே இல்லை என்பதால், இந்த முறை பலமான அணியை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

Trending


இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியை பொறுத்தவரை பல்வேறு வீரர்களும் சிறப்பாக விளையாடியுள்ளதால் தேர்வு செய்வதில் சேட்டன் சர்மா தலைமையிலான குழு குழப்பத்தில் உள்ளது. இதனால் வீரர்கள் தேர்வில் தாமதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இன்று தொடங்கியுள்ள விஜய் ஹசாரே கோப்பை தொடரை குறிவைத்து தான் தாமதம் ஏற்படுகிறது.

இந்தியா - தென் ஆப்பிரிக்க ஒருநாள் போட்டி தொடர் ஜனவரி 19ஆம் தேதியன்று தான் தொடங்குகிறது. இதற்கு இன்னும் ஒருமாத காலத்திற்கும் மேல் கால அவகாசம் இருப்பதால் விஜய் ஹசாரே தொடரில் சிறப்பாக விளையாடும் வீரர்களை பரிந்துரைக்க ஆலோசனை நடந்துள்ளது. சீனியர் வீரர்கள் சிலருக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளதால், இளம் வீரர்கள் பெரும் அளவில் இடம்பெறலாம்.

இந்நிலையில் இளம் வீரருக்கு ஆப்பு வைக்க கம்பேக் கொடுக்கவுள்ளார் இந்தியாவின் ஓப்பனிங் வீரர் ஷிகர் தவான். பேட்டிங் ஃபார்ம் இல்லை என அவர் கழட்டிவிடப்பட்டதில் இருந்து கே.எல்.ராகுல், சுப்மன் கில், மயங்க் அகர்வால் போன்றவர்கள் தான் ஓப்பனிங் விளையாடுகிறார்கள். தென் ஆப்பிரிக்க தொடரிலும் இது தான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில மாதங்களாக தவான் காட்டி வரும் அதிரடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய ஷிகர், சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் இந்திய அணியை தலைமை தாங்கி சிறப்பாக வழிநடத்தினார். இதே போல உள்ளூர் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருவதால் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் நிச்சயம் இடம்பெறலாம். 

இதனால் மீண்டும் ரோகித் - தவான் இணை ஜோடி சேர்கிறது. கே.எல்.ராகுல், சுப்மன் கில் போன்ற ஓப்பனிங் வீரர்கள் வெளியே உட்கார வைக்கப்படவுள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.


Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement