பாகிஸ்தான் ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை - ஷிகர் தவான்!
இந்திய அணியின் மூத்த வீரர் ஷிகர் தவான், பாகிஸ்தான் வீரர்கள் பந்தை தவறவிட்ட காணொளியை பதிவிட்டு, பாகிஸ்தான் அணியின் பீல்டிங் முடிவில்லாத காதல் கதை என்று தலைப்பிட்டுள்ளார்.
ஐசிசி 2023 உலகக் கோப்பைக்கு அனைத்து கிரிக்கெட் அணிகளும் தயாராகும் நடைபெற்று வரும் பயிற்சி போட்டிகளில் அனைத்து அணியினரும் விளையாடிவருகின்றனர். இதில் இன்று ஹைதராபாத் நகரில் நடைபெற்ற பயிற்சி போட்டியில் வலுவான ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 351 ரன்களை குவித்தது. இதில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 48, மார்னஸ் லபுஷாக்னே 40, கிளன் மேக்ஸ்வெல் 77, கேமரூன் கிரீன் 50, ஜோஷ் இங்லீஷ் 48 ரன்கள் ரன்களைஒ எடுத்தனர்.
Trending
பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக உஷாமா மிர் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். முன்னதாக இந்த போட்டியில் ஹரிஷ் ரவூப் வீசிய 23ஆவது ஓவரின் முதல் பந்தை எதிர்கொண்ட ஸ்டீவ் ஸ்மித் லெக் சைட் திசையில் லேசாக தட்டி விட்டு இரண்டு ரன் எடுக்க ஓடினார். அப்போது அதை இருபுறங்களிலும் இருந்து பாகிஸ்தான் வீரர்கள் முகமது நவாஸ் மற்றும் இமாத் வாசிம் ஆகியோர் தடுப்பதற்காக வேகமாக ஓடி வந்தனர்.
இருப்பினும் கிட்டத்தட்ட இருவருமே மிகச் சரியாக ஓடி வந்த நிலையில் பந்து அவர்களுக்கு நடுவே பவுண்டரியை நோக்கி வந்து கொண்டிருந்த போது, ஒருவர் மீது ஒருவர் மோதிக்கொள்வோம் என்ற பயத்தில் பந்தை அவர் தடுப்பார் என்று இவரும் இவர் தடுப்பார் என்று அவரும் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்தார்களே தவிர கடைசி வரை யாருமே தடுக்கவில்லை.
மறுபுறம் அந்த சமயத்திற்குள் மெதுவாக வந்து கொண்டிருந்த பந்து அவர்களை கடந்து பவுண்டரி எல்லையை தொட்டு ஆஸ்திரேலியாவுக்கு 4 எளிதான ரன்களை கொடுத்தது. இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் ஆரவாரத்துடன் கூச்சலிட்டு கலாய்த்த நிலையில் “இது மட்டும் பாகிஸ்தான் அணியில் மாறவில்லை” என்று நேரலையில் வர்ணனையாளராக செயல்பட்ட சஞ்சய் மஞ்ரேக்கர் கலகலப்பாக பேசினார்.
Pakistan & fielding never ending love story #PakistanFielding #PakCricket pic.twitter.com/AJzT90hgNM
— Shikhar Dhawan (@SDhawan25) October 3, 2023
இந்நிலையில் இதை பார்த்த நட்சத்திர இந்திய வீரர் ஷிகர் தவான் “பாகிஸ்தான் மற்றும் அவர்களுடைய ஃபீல்டிங் எப்போதுமே முடியாத காதல் கதை” என்று தனது சமூக வலைதளப்பதிவில் காணொளியாக பதிவிட்டு கலாய்த்துள்ளார். இந்நிலையில் இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Win Big, Make Your Cricket Tales Now