Advertisement

IND vs WI: ஷிகர் தவான் வெளியிட்டுள்ள பதிவு!

அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன் என கரோனாவால் பாதிக்கப்பட்ட ஷிகர் தவன் கூறியுள்ளார்.

Advertisement
Shikhar Dhawan thankful for love after testing Covid-19 positive: I am doing fine
Shikhar Dhawan thankful for love after testing Covid-19 positive: I am doing fine (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 03, 2022 • 04:10 PM

வெஸ்ட் இண்டீஸ் அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் தொடர் பிப்ரவரி 6 அன்றும் டி20 தொடர் பிப்ரவரி 16 அன்றும் தொடங்குகின்றன. ஒருநாள் தொடர் ஆமதாபாத்திலும் டி20 தொடர் கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளன. 

Bharathi Kannan
By Bharathi Kannan
February 03, 2022 • 04:10 PM

கொல்கத்தாவில் நடைபெறும் மூன்று டி20 ஆட்டங்களுக்கும் 75% ரசிகர்களை அனுமதிக்க மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது. ஆனால் அகமதாபாத் நகரில் நிலவும் கரோனா பாதிப்பைக் கருத்தில் கொண்டு 3 ஒருநாள் ஆட்டங்களிலும் ரசிகர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என குஜராத் கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. 

Trending

ஒருநாள் தொடருக்காக ஆமதாபாத் வந்த இந்திய வீரர்களில் ஷிகர் தவன், ருதுராஜ் கெயிக்வாட், ஸ்ரேயஸ் ஐயர், சைனி, அக்சர் படேல் ஆகியோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் ஃபீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப், பாதுகாப்பு அதிகாரி பி. லோகேஷ், மசாஜ் நிபுணர் ராஜீவ் குமார் என ஒட்டுமொத்தமாக ஏழு பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியில் அசாதாரணமான சூழ்நிலை நிலவுகிறது. 

இந்திய அணியில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் விளையாட கேப்டன் ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், ஆல்ரவுண்டர் தீபக் ஹூடா என ஐந்து பேட்டர்கள் மட்டுமே உள்ளார்கள். இதன் காரணமாக இந்திய அணியில் மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள ஷிகர் தவன் ட்விட்டரில் தகவல் அளித்துள்ளார். அதில் அவர், “அனைவருடைய வாழ்த்துகளுக்கும் நன்றி. நான் நலமாக உள்ளேன். அனைவரும் அளித்த அன்பினால் நெகிழ்ந்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement