Advertisement
Advertisement

தென் ஆப்பிரிக்க தொடரில் இந்த்ய அணியின் கேப்டனாக ஷிகர் தவான்?

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக ஷிகர் தவான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Bharathi Kannan
By Bharathi Kannan May 19, 2022 • 14:31 PM
Shikhar Dhawan to lead, comeback for Hardik Pandya:
Shikhar Dhawan to lead, comeback for Hardik Pandya: (Image Source: Google)
Advertisement

ஐபிஎல் 15ஆவது சீசன் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 26ஆம் தேதி துவங்கிய இத்தொடர் இம்மாதம் 29ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இந்தியா அணி தென் ஆப்பிரிக்க அணி வரும் ஜூன் 9 முதல் ஜூன் 19 வரை 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட உள்ளது.

இதற்கான இந்திய அணியை தேர்வு செய்யும் பணியை பிசிசிஐ தற்போது இருந்தே துவங்கிவிட்டது. இந்திய அணியின் சீனியர் வீரர்கள் அனைவரும் ஓய்வில்லாமல் தொடர்ந்து வெஸ்ட் தீவுகள், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, ஐபிஎல் போன்றவற்றில் விளையாடி வருவதால், அவர்களுக்கு தென் ஆப்பிரிக்க தொடரில் ஓய்வு கொடுக்க முதற்கட்ட மீட்டிங்கில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Trending


மேலும் தற்போதைக்கு உத்தேச அணியையும் அவர்கள் தேர்வு செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி அணியின் தொடக்க வீரர்களாக இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷிகர் தவன் ஆகியோரும், மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஆல்-ரவுண்டர்களில் ஹார்திக் பாண்டியா, தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயரும், சுழற்பந்து வீச்சாளர்களாக யுஜ்வேந்திர சஹல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவும் வேகப்பந்து வீச்சாளர்களாக புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், ஆவேஷ் கான், டி நடராஜன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த அணிக்கு ஹார்திக் பாண்டியா அல்லது ஷிகர் தவன் ஆகியோரில் ஒருவரைத்தான் கேப்டனாக நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளது. காரணம், இந்த தொடரை தொடர்ந்து இங்கிலாந்து தொடரில் பங்கேற்க இந்திய அணியினர் ஜூன் 15ஆம் தேதி இங்கிலாந்துக்கு புறப்பட்டு செல்ல உள்ளனர். 

இதனால், ஹார்திக் பாண்டியா மற்றும் சில வீரர்கள் தென் ஆப்பிரிக்க தொடரின் ஒருசில போட்டிகளில் பங்கேற்றுவிட்டு, இங்கிலாந்து செல்லும் இந்திய அணியினருடன் இணைந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இதனால்தான், கேப்டனாக முதலில் ஹார்திக் பாண்டியாவை தேர்வுசெய்துவிட்டு, தற்போது மீண்டும் ஷிகர் தவனையே கேப்டனாக நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Cricket Scorecard

Advertisement
Advertisement
Advertisement