
சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 தொடரில் இன்று நடைபெற்ற குரூப் இ பிரிவுக்கான லீக் போட்டியில் மும்பை மற்றும் சர்வீசஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற சர்விசஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தது.
அதன்படி களமிறங்கிய மும்பை அணியில் தொடக்க வீரர் பிரத்வி ஷா ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழந்தர். அவரைத்தொடர்ந்து அஜிங்கியா ரஹானே 22 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20 ரன்னிலும் என ஆட்டமிழந்தனர். அதன்பின் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் - ஷிவம் தூபே இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியதுடன், இருவரும் தங்கள் அரைசதங்களையும் பதிவுசெய்தனர்.
அதன்பின் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 70 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஷிவம் தூபே 2 பவுண்டரி, 7 சிக்ஸர்கள் என 71 ரன்களைச் சேர்த்து அணிக்கு தேவையான ஃபினிஷிங்கை கொடுத்தனர். இதன்மூலம் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களைச் சேர்த்தது. பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய சர்விசஸ் அணிக்கு தொடக்கம் சிறப்பாக அமையவில்லை.