
இந்தியா- ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மொகாலியில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஃப்கானிஸ்தான் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் சேர்த்தது. பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆட்டத்தின் 2ஆவது பந்திலேயே ரோஹித் சர்மா ரன்அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து ஷுப்மன் கில் 23 ரன்களுக்கு, திலக் வர்மா 26 ரன்களுக்கும் என விக்கெட்டை இழந்தனர்.
அதன்பின் களமிறங்கிய ஷிவம் தூபே ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாட மறுமுனையில் ஜிதேஷ் சர்மா 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷிவம் தூபே 38 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணி 17.3 ஓவரில் இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தனை வீழ்த்தி வெற்றி பெற்றது.
தொடர்ந்து பேட்டிங்கில் கடைசி வரை களத்தில் இருந்த ஷிவம் தூபே 40 பந்துகளில் 60 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதையும் தட்டி சென்றார். ஷிவம் தூபே ஆல்ரவுண்டராக முன்னேற்றம் கண்டிருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த போட்டிக்கு பின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவுடன் ஷிவம் தூபே தொலைக்காட்சியில் பேசினார்.