Shoaib Akhtar, Jayasuriya & Afridi To Play For Asia Lions In Legends Cricket League (Image Source: Google)
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் கிரிக்கெட் லீக் (எல்சிஎல்) ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள எல்சிஎல் தொடரானது ஓமனில் ஜனவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடருக்கான ஆசியா லையன்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களை அந்த அணி நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.
அதன்படி இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் சனத் ஜெயசூர்யா, பாகிஸ்தானின் சோயிப் அக்தர், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் இந்த அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும் ஆஃப்கானிஸ்தான் அணியின் முன்னாள் கேபட்ன் ஆஸ்கர் ஆஃப்கானும் இந்த அணியில் இடம்பிடித்துள்ளார்.