
ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படும் சாஞ்சு சாம்சன், ஐபிஎல் மற்றம் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தி வருகிறார். இதுவரை 124 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3161 ரன்கள் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள், 16 அரைசதங்களும் அடங்கும்.
இந்த நிலையில், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர் அளித்த பேட்டியில், இந்திய அணிக்காக சஞ்சு சாம்சன் அதிக போட்டியில் விளையாடி இருந்திருக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்திய கிரிக்கெட்டிலேயே ஒரு சிறந்த வீரராக சஞ்சு சாம்சன் விளங்குவதாக பாராட்டு தெரிவித்த சோயிப் அக்தர்,
எனினும் அவரால் இந்திய அணியில் நிரந்தர இடம் பிடிக்க முடியாமல் போனது அவரின் துரதிர்ஷ்டம் தான் என்று கூறியுள்ளார். அவருக்கு நிறைய திறமை இருக்கிறது என்று சோயிப் அகத்ர் பாராட்டியுள்ளார். சஞ்சு சாம்சன் இது வரை இந்திய அணிக்காக ஒரு ஒருநாள் போட்டி மற்றும் 13 டி20 போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறார்.