
டி20 உலக கோப்பை வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்குகிறது. டி20 உலக கோப்பை தொடங்க இன்னும் ஒரு மாத காலமே உள்ளதால், அதற்காக மற்ற அணிகளை போல பாகிஸ்தான் அணியும் தீவிரமாக தயாராகிவரும் நிலையில் பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து தலைமை பயிற்சியாளர் மிஸ்பா உல் ஹக் மற்றும் பவுலிங் பயிற்சியாளர் வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் ராஜினாமா செய்துள்ளனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் புதிய தலைவராக ரமீஸ் ராஜா பொறுப்பேற்கும் நிலையில், இவர்கள் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகியுள்ளனர். மேலும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இவர்கள் தங்கள் பதவியிலிருந்து விலகியது சர்வதேச கிரிக்கெட் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவர்கள் தங்களது பதவிலிருந்து விலகிய உடனேயே, நியூசிலாந்துக்கு எதிரான தொடருக்கான பயிற்சியாளர்களாக சக்லைன் முஷ்டாக்கும், அப்துல் ரசாக்கும் நியமிக்கப்பட்டனர். இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அரசியலை வெளிப்படையாக காட்டியது.