இந்திய அணியை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் - சோயப் அக்தர்!
பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்று அவர்களை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடர்பாக பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய அணியை பகிஸ்தான் செல்ல அனுமதி மறுத்துவிட்டது. அதே நேரத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முதலில் ஹைபிரிட் மாடலில் இத்தொடரை நடத்துவதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆனால் அதன்பின் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் மாடலை ஏற்காவிட்டால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என பாகிஸ்தானுக்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து இந்த தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஹைபிரிட் மாடலில் நடத்த ஒப்புகொண்டதாக தகவல்கள் வெளியான நிலையில், இதே முறையை இந்தியாவில் நடத்த்ப்படும் தொடரிலும் பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்ததாக கூறப்பட்டது.
Trending
அதன்ப்டி எதிர்வரும் 2031ஆம் ஆண்டு வரை இந்தியாவில் விளையாடும் ஐசிசி தொடர்களையும் ஹைபிரிட் மாடலில் நடத்த வேண்டும் என்று பகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், பாகிஸ்தான் இந்தியாவுக்குச் சென்று அவர்களை சொந்த நாட்டில் தோற்கடிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோய்ப் அக்தர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அக்தர், “இந்த அறிக்கைகள் மக்களின் நன்மதிப்பைக் கெடுக்கின்றன. போட்டிகளை நடத்துவதற்கு நீங்கள் பணம் பெறுகிறீர்கள் மற்றும் வருவாய் ஈட்ட வாய்ப்புகள் உள்ளன. அது பரவாயில்லை, நாம் அனைவரும் அதைப் புரிந்துகொள்கிறோம். அதனால் பாகிஸ்தானின் நிலைப்பாடும் சரிதான். நீங்கள் சாம்பியன்ஸ் கோப்பையை நடத்த முடிவு எடுத்த போதே இந்திய அணி பாகிஸ்தான் வரமாட்டார்கள் என்று தகவல்கள் வெளியாகின.
Also Read: Funding To Save Test Cricket
இதனால் ஹைபிரிட் மாடலில் இந்த தொடரை நடத்தும் பட்சத்தில் தொடருக்கான வருவாயை அதிக செலவில் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இதன் காரணமாகவே பாகிஸ்தான் அணியும் இந்தியாவில் நடத்தப்படும் தொடர்களிலும் இதே முறையை பின்பற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் எதிர்காலத்தில் பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடி அவர்களை சொந்த மண்ணில் வீழ்த்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now