
கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் அனைத்து வகையான ஆட்டங்களிலும் முன்னாள் உலக சாம்பியனான பாகிஸ்தானை பாபர் ஆசாம் வழிநடத்தி வருகிறார். அவரது தலைமையின் கீழ், பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இருப்பினும், பாகிஸ்தானின் அடுத்த ஒயிட்-பால் கேப்டனாக பாபர் அசாமை மாற்ற வேண்டும் என்று சோயப் அக்தர் தெரிவித்துள்ளார்.
பாபர் அசாமுக்கு எதிராக ஷோயிப் அக்தர் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் அக்தர் வம்பிழுத்தார். பாகிஸ்தானிய வீரர்களின் ஆங்கிலத்தில் நன்றாகப் பேச இயலாமை பற்றி சமீபத்தில் விரிவாகப் பேசிய அக்தர், பாபரின் பேச்சுத்திறன் மீது பணியாற்றுமாறு வலியுறுத்தினார். பாபர் பாகிஸ்தானில் மிகப்பெரிய பிராண்டாக மாறத் தவறிவிட்டார் என்றும் அக்தர் கூறினார். ஆல்-ரவுண்டர் ஷதாப் கான் பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக வருவதற்கு அக்தர் ஆதரவு அளித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “கிரிக்கெட் திறமையைப் பொறுத்தவரை ஷதாப் மிகவும் புத்திசாலி குழந்தை. அவர் முன்னேற விரும்புகிறார், இது மிகவும் நல்ல விஷயம். அவர் தனது தவறுகளை ஏற்றுக்கொண்டு அவற்றை சரிசெய்ய தயாராக இருக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் தனது பந்துவீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.