
டி20 உலககோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள் பாகிஸ்தான் அணியில் நடுவரிசை மிகவும் சொதப்பலாக உள்ளது. தொடக்க வீரர் பாபர் ஆசாம், முகமது ரிஸ்வானை தவிர மற்ற வீரர்கள் சொதப்பி வருகின்றனர். இது பாகிஸ்தான் அணியின் பெரிய குறையாக பார்க்கப்படுகிறது. சோயிப் மாலிக் நீக்கப்பட்டதாலேயே பாகிஸ்தான் அணியின் நடுவரிசை பலவீனமாக காட்சி அளிப்பதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது 40 வயதான சோயிப் மாலிக், பாகிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டு டி20 தொடரான நேசனல் கப் ஆட்டத்தில் 204 ரன்களை அடித்துள்ளார். இதில் 2 அரைசதங்கள் அடங்கும். அந்த தொடரில் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 140.68 ஆகும். இதே போன்று நடப்பாண்டில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் 11 இன்னிங்சில் 401 ரன்களை விளாசினார்.
இதில் 3 அரைசதம் அடங்கும். சோயிப் மாலிக்கின் ஸ்ட்ரைக் ரேட் 137 ஆக இருந்தது. இந்த நிலையில், சோயிப் மாலிக் கடந்த உலககோப்பை தொடருக்கு பிறகு நடைபெற்ற டி20 தொடரில் வங்கதேத்தை தவிர வேறு எந்த தொடரில் தேர்வாக வில்லை. இவ்வளவு சிறப்பாக செயல்பட்டும், முழு உடல் தகுதியிடன் இருந்தும் சோயிப் மாலிக் சேர்க்கப்படவில்லை.