
இந்தியாவில் சுற்றூப்பயணம் செய்துவரும் வங்கதேச அணியானது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடவுள்ளது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான டெஸ்ட் இத்தொடரானது செப்டம்பர் 19ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியானது சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான இந்த அணியில் இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதேசமயம் அறிமுக வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளிற்கும் இப்போட்டியில் விளையாடும் வாய்ப்பானது வழங்கப்பட்டுள்ளது.
மேற்கொண்டு விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சர்ஃப்ராஸ் கான், துருவ் ஜூரெல், ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், அக்ஸர் படேல் ஆகியோருடன் முகமது சிராஜ், ஆகாஷ் தீப் வேகப்பந்து வீச்சாளர்களுடன் இடம்பிடித்துள்ளனர். மேலும் இத்தொடரில் ஓய்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா இப்போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்.