
இந்தியா - இலங்கை இடையேயான முதல் டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அந்த போட்டியில் ஜடேஜா அபாரமாக பேட்டிங் ஆடி அதிகபட்சமாக 175 ரன்களை குவித்தார். ரிஷப் பண்ட் 96 ரன்களையும், அஷ்வின் 61 ரன்களையும் அடித்த நிலையில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 29 ரன்களில் ஆட்டமிழந்தார். ரோஹித் சர்மா அதிரடியாகத்தான் தொடங்கினார். நல்ல டச்சில் பெரிய ஷாட்டுகளை அருமையாக ஆடினார். 27 பந்திலேயே 29 ரன்களை அடித்தார். ஆனால் அவர் எதிர்கொண்ட 28வது பந்தில் புல் ஷாட் ஆடி, டீப் ஃபைன் லெக் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
ரோஹித் சர்மா பவுன்ஸர் வீசினால், அவரது ஃபேவரைட் ஷாட்டான புல் ஷாட் ஆடுவார் என்பதை அறிந்து, அதையே அவருக்கு எதிரான ஆயுதமாக பயன்படுத்தி அவரை வீழ்த்திவிடுகின்றன. இலங்கை அணியும் அதைத்தான் செய்தது. ரோஹித் சர்மா ஷார்ட் பிட்ச் பந்துகளை புல் ஷாட் ஆடுவார் என்பதறிந்து, டீப் ஃபைன் லெக் திசையில் ஃபீல்டரை நிறுத்தி வேகமாக பவுன்ஸர் வீசி ரோஹித்தை வீழ்த்திவிட்டனர்.