
டி20 உலக கோப்பை வெற்றிகரமாக நடந்துமுடிந்தது. டி20 உலக கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி கோப்பையை 2வது முறையாக வென்றது. இந்த டி20 உலக கோப்பையை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஏமாற்றமளித்தன.
இந்திய அணி அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்றது. ஆஸ்திரேலிய அணி அரையிறுதிக்கே முன்னேறவில்லை. நியூசிலாந்தை அரையிறுதியில் வீழ்த்தி பாகிஸ்தான் அணியும், இந்தியாவை வீழ்த்தி இங்கிலாந்து அணியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து கோப்பையை வென்றது. முதல் அரையிறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நிலையில், 2ஆவது அரையிறுதியில் இங்கிலாந்திடம் இந்திய அணி தோற்ற நிலையில், இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும் தகுதி இந்திய அணிக்கு இல்லை என்று ஷோயப் அக்தர் கிண்டலடித்தார்.