
Shreyas Iyer blessed to receive Test cap from Sunil Gavaskar: Dinesh Karthik (Image Source: Google)
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கான்பூரில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்து விளையாடி வருகிறது.
மேலும் இப்போட்டிக்கான இந்திய அணியில் அறிமுக வீரராக ஸ்ரேயாஸ் ஐயர் சேர்க்கப்பட்டுள்ளார். அதன்படி முன்னாள் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் டெஸ்ட் போட்டிக்கான தொப்பியை ஸ்ரேயாஸிடம் வழங்கி அவரை அறிமுகப்படுத்தி வைத்தார்.
இந்நிலையில், சுனில் கவாஸ்கரிடம் தொப்பியை வாங்க ஸ்ரேயாஸ் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று தினேஷ் கார்த்திக் கூறியுள்ளார்.