Advertisement

கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?

ஆர்சிபி அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் விளையாடும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்?
கேஎல் ராகுலின் சாதனையை முறியடிப்பாரா ஸ்ரேயாஸ் ஐயர்? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jun 03, 2025 • 03:30 PM

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரின் இறுதிப்போட்டியானது இன்று அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

Bharathi Kannan
By Bharathi Kannan
June 03, 2025 • 03:30 PM

இதில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை கொப்பையை வென்றிடாத ராஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இதனால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று மகுடம் சூடும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

கேஎல் ராகுலின் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

இப்போட்டியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் சில சிறப்பு சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். அதன்படி இப்போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் 68 ரன்களை சேர்க்கும் பட்சத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இரு சீசனில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையைப் படைப்பார். தற்போது வரையிலும் கடந்த 2020ஆம் ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த கேஎல் ராகுல் 670 ரன்களைக் குவித்ததே சாதனையாக இருந்து வருகிறது. தற்சமயம் பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 16 போட்டிகளில் விளையாடி 6 அரைசதங்களுடன் 603 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஒரு சீசனில் அதிக ரன்கள்

  • 670 - கேஎல்ராகுல் (2020)
  • 626 - கேஎல் ராகுல் (2021)
  • 603* - ஷ்ரேயாஸ் ஐயர் (2025)

நிக்கோலஸ் பூரன் சாதனையை முறியடிக்கும் வாய்ப்பு

நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் துணைக்கேப்டன் நிக்கோலஸ் பூரன் உள்ளார். அவர் இந்த ஐபிஎல் தொடரில் 14 போட்டிகளில் விளையாடி 40 சிக்ஸர்களை விளாசிவுள்ளார். இந்நிலையில் இன்றைய அட்டத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 2 சிக்ஸர்களை அடிக்கும் பட்சத்தில் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்களை அடித்த வீரர் எனும் பெரும்யைப் பெறுவார். அவர் இதுவரை 16 போட்டிகளில் விளையாடி 39 சிக்ஸர்களை அடித்துள்ளார்.

ஐபிஎல் 2025ல் அதிக சிக்ஸர்கள்

  • 40 - நிக்கோலஸ் பூரன் (14 இன்னிங்ஸ்)
  • 39* - ஸ்ரேயாஸ் ஐயர் (16 இன்னிங்ஸ்)
  • 38 - சூர்யகுமார் யாதவ் (16 இன்னிங்ஸ்)
  • 37 - மிட்செல் மார்ஷ் (13 இன்னிங்ஸ்)
  • 28 - அபிஷேக் சர்மா (14 இன்னிங்ஸ்)

நடப்பு ஐபிஎல் சீசனில் அதிக அரைசதங்கள்

பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் நடப்பு ஐபிஎல் தொடரில் 16 இன்னிங்ஸ்களில் 6 அரைசதங்கள் அடித்துள்ளார். இந்நிலையில் ஆர்சிபிக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் அவரால் அரைசதம் அடிக்க முடிந்தால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக அரைசதங்களை அடித்த கேப்டன் எனும் பெருமையைப் பெறுவார். தற்சமயம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் 15 இன்னிங்ஸ்களில் 6 அரைசதங்களை அடித்து கூட்டாக முதலிடத்தில் உள்ளார்.

ஒரு கேப்டனாக அதிக முறை 50+ ரன்கள்

  • ஸ்ரேயாஸ் ஐயர் - 6* (16 இன்னிங்ஸ்)
  • ஷுப்மான் கில் - 6 (15 இன்னிங்ஸ்)
  • அஜிங்க்யா ரஹானே - 3 (12 இன்னிங்ஸ்)

RCB vs PBKS Predicted Playing 11

Punjab Kings XI : பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்கிலிஸ், ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நேஹல் வதேரா, ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோனிஸ், அஸ்மதுல்லா ஓமர்சாய், அர்ஷ்தீப் சிங், கைல் ஜேமிசன், வைஷாக் விஜய் குமார்.

இம்பாக்ட் பிளேயர் - யுஸ்வேந்திர சாஹல்.

Royal Challengers Bengaluru XI :பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், ரஜத் படிதார் (கேப்டன்), ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், குர்னால் பாண்டியா, ரொமாரியோ ஷெப்பர்ட், புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட்.

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் பிளேயர் - சுயாஷ் சர்மா.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement