
Shreyas Iyer To Make Test Debut Against New Zealand In 1st Test: Ajinkya Rahane (Image Source: Google)
இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டி20, 2 டெஸ்டுகளில் விளையாடுகிறது நியூசிலாந்து அணி. 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக வென்றது இந்திய அணி. டெஸ்ட் தொடர் நாளை முதல் (நவம்பர் 25) தொடங்குகிறது. முதல் டெஸ்ட் நாளை கான்பூரில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த கேப்டன் ரஹானே, முதல் டெஸ்டில் ஸ்ரேயஸ் ஐயர் விளையாடவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால் ஸ்ரேயஸ் ஐயர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகவுள்ளார்.
மேலும் இந்திய அணியின் அறிமுகமாகும் 303ஆவது டெஸ்ட் வீரராக ஸ்ரேயஸ் ஐயர் உள்ளார். காயம் காரணமாக கே.எல். ராகுல், டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதால் ஸ்ரேயஸ் ஐயருக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.