1-mdl.jpg)
ஐபிஎல் 2023 சாம்பியன் யாா் என்பதற்கான பலப்பரிட்சையில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ், 4 முறை சாம்பியன் சென்னை சூப்பா் கிங்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. அகமதாபாதின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த இறுதி ஆட்டம் மழையால் தாமதமாக தொடங்க வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி குறித்து முன்னாள் இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், “இந்த சீசனில் ஷுப்மன் கில், செயல்பாடு மறக்க முடியாத அளவுக்கு சிறப்பாக அவருக்கு அமைந்திருக்கிறது. அதுவும் அவர் கடைசியாக அடித்த இரண்டு சதம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஒரு சதம் மும்பையின் ஃபைனல் கனவை தகர்த்து விட்டது. மற்றொரு சதமும் எதிரணியின் வெற்றி வாய்ப்பை நசுக்கிவிட்டது. டி20 கிரிக்கெட்டில் இயற்கையே இதுதான். நாம் எதையும் கணிக்க முடியாது.
ஷுப்மன் கில் பேட்டிங்கில் பிரமாதமான பொறுமையும், அமைதியான மன நிலையிலும், ரன்களுக்கான வேட்கையும், ஓடி ரன்கள் எடுப்பதற்கான முனைப்பையும் காட்டி வருகிறார். இதுபோன்ற மிகப்பெரிய போட்டிகளில் சுப்மன் கில்லின் இந்த பழக்கம் தான் முடிவை நமக்கு சாதகமாக கொடுக்கும். மும்பைக்கு எதிரான போட்டியில் கூட ஷுப்மன் கில் 12ஆவது ஓவரிலிருந்து வேற லெவலில் விளையாடி மிகப்பெரிய ஸ்கோரை நோக்கி கொண்டு சென்றிருப்பார்.